Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உலகத் தமிழர் தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

உலகத் தமிழர் தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இம்மாநாட்டில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பகிரவும் WhatsApp Facebook

துபாயில் வரும் நவம்பர் 12ம் தேதி துவங்க உள்ள உலகத் தமிழர் தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்க எழுமின் அமைப்பின் தலைவர் ஜெகத் கஸ்பர் அழைப்பு விடுத்துள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:

எழுமின் அமைப்பின் சார்பில் 17-வது மாநாடாக இந்நிகழ்வு நடைபெறுகிறது. சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த தமிழ் தொழிலதிபர்கள், புதிய தொழில் வாய்ப்புகளைத் தேடும் தொழில்முனைவோர் என 750-க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். 

ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சர்வதேச சந்தையை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளை இம்மாநாடு உருவாக்கும். குறிப்பாக, திருப்பூர் தொழிலதிபர்கள் தங்களது வர்த்தகத்தை உலகளவில் விரிவுபடுத்துவதற்கு இது சிறந்த தளமாக அமையும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு இம்மாநாட்டில் சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பங்கேற்பது குறித்து பயிற்சி முகாம் நடைபெறுகிறது. எழுமின் அமைப்பு இதுவரை நடத்திய 16 மாநாடுகளின் வாயிலாக சுமார் 10,000 தொழில் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் குறைந்தபட்சம் 350 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பூரில் இருந்து இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மட்டும் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் பங்கேற்கின்றனர்.

மாநாட்டில் பங்கேற்க விரும்புவோர் நவம்பர் 3-ம் தேதிக்குள் www.tamilrise.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு ஜெகத் கஸ்பர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி
மின்சார கொள்முதல் மறு டெண்டரில் விலைப்புள்ளி 20% குறைவு: நிர்மல் குமார்
அடுத்த செய்தி
PM Modi congratulates successful NVS 03 launch

தொடர்புடைய செய்திகள்